ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனைக்கு நடனமாடுவது தீர்வாகுமா? ஆய்வின் முடிவு இதோ
நடனமாடுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாக இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நடனமாடுதல்
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைப்பதில் நடனம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கின்றது. நடனத்தால் மனநலம் மற்றும் மன உறுதி மட்டுமின்றி மன சுறுசுறுப்பும் அதிகரித்துள்ளது.
நடன கலைஞர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் மேம்படுவதுடன், ஆக்ஸிடாசின், எண்டோர்பின் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியாகி, மன அழுத்தம், பயம், சோர்வு, பதற்றம் போன்றவற்றைக் குறைக்கின்றன.
நடனம், கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவித்து, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
இதன் மூலம் உடலின் இயற்கையான மன அழுத்தக் கட்டுப்பாட்டு முறைகள் மேம்படுவதுடன், தினசரி வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க நடனம் ஒரு சிறந்த வழியாகவும் இருக்கின்றது.
மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் ஒரு பயிற்சியாகவும் நடனம் கருதப்படுகிறது. இந்த காரணத்தால் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை சேர்க்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆராய்ச்சிகளின்படி, நடனம் மூலம் செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு உயர்ந்து, மனநிலை உற்சாகமாக இருப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |