தினமும் அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?
தினமும் காலை அவித்த முட்டை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
மனிதர்களுக்கு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் முட்டையை நீங்கள் எவ்வாறு சாப்பிடுகின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்களது ஆரோக்கியம் இருக்கின்றது.
புரதச்சத்து நிறைந்த முட்டையினை தினமும் சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிக மிக முக்கியமாகும்.
சில தருணங்களில் முட்டையை சரியாக சேமித்து வைக்காமல், அதனை சாப்பிடும் போது உடல் தொந்தரவு ஏற்படவும் செய்கின்றது.

நன்மைகள் என்ன?
முட்டையில் உள்ள உயர் தரமான புரோட்டின், தசைகளை பலப்படுத்தி வளர்ச்சிக்கு உதவும்..
கோலின் சத்து நினைவுத்திறன் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.
வைட்டமின் A, D,E,B12 மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..
அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த கலோரி என்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும்..
புயோட்டின், வைட்டமின் E மற்றும் சிறந்த புரோட்டின் இருப்பதால் முடி உதிர்வை குறைத்து, தோலை மினுமினுக்க வைக்கும்.
லூட்டின் (Lutein) மற்றும் ஜியாக்சாந்தின்(Zeaxanthin) சத்துக்கள் கண்களை பாதுகாத்து, பார்வை திறனை மேம்படுத்தும்..