தினமும் பூண்டை சாப்பிடுவதால் நிகழும் அதிசயம்! எடையை ஈஸியா குறைக்கலாம்
பூண்டு பல நோய்களுக்கு, குறிப்பாக செரிமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.
பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், உணவு நச்சுத்தன்மையை அகற்றவும் பூண்டு போதுமானது. ஆயுர்வேதத்தின்படி, பூண்டு வாத நோயை குணப்படுத்தும்.
பூண்டின் நன்மைகள்
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
சிறிதளவு சூடான நீரில் உப்பு மற்றும் பூண்டு சாறு கலந்து காதில் மூன்று துளிகள் ஊற்றுவது காது வலி போக்க வல்லது.
தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு வறுத்த பூண்டு பற்களை மென்று சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் நல்லது. இது மட்டுமல்லாமல், பூண்டின் உதவியுடன் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
மயங்கி விழுந்தும் இறுதியில் அதிரடி காட்டிய தாமரை! பிக்பாஸ் அறிவித்தது என்ன?
எடையைக் குறைக்கும்
பூண்டு உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்கிறது. நசுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன் தவறாமல் உட்கொள்வது இதய நோய் அபாயத்தை நீக்குகிறது.
காலையில், வெதுவெதுப்பான நீரில் இரண்டு பல் பூண்டு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இது நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
பல்வலி உள்ளவர்கள் ஒரு பல் பூண்டை நறுக்கி வலிமிகுந்த பல்லின் கீழ் வைத்தால் பல்வலியில் இருந்து விடுபடலாம்.
வெண்ணெயுடன் பூண்டை வறுத்து சாப்பிடுவது மூல நோய்க்கு நல்லது. தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு பூண்டு முக்கியம். இதன் பயன்பாடு முடி உதிர்தலை நீக்குகிறது.