எந்தவொரு நோயும் தாக்காமல் இருக்கணுமா? தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்
தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய்
நீர்ச்சத்து நிறைந்துள்ள நெல்லிக்காயில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கனியாகவும் நெல்லிக்காய் இருக்கின்றது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும் நெல்லிக்காய் உடல் பருமனை எரிக்க உதவும்.
கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் அருமருந்தாக இருக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல் மட்டுமின்றி அனைத்து வகையான செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாமருந்தாக நெல்லிக்காய் இருக்கின்றது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படுகின்றது.
நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படும் நிலையில், இதனை உட்கொள்வதால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |