தினம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸ் குடிங்க... கண்கூடாக தெரியும் அதிசயம்
எலுமிச்சை ஜுஸ் தினமும் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை ஜூஸ் மருத்துவ நன்மைகள்
எலுமிச்சை ஜுஸ் பருகுவதால் தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் குறையும்.
நுரையீரல் தொற்றை குறைப்பதடன், வாய் துர்நாற்றத்தை நீக்கவும், சீரான சுவாசத்தைக் கொடுக்கவும் செய்கின்றது.
வைட்டமின் சி சத்துக்களைக் கொண்ட எலுமிச்சையை நாம் ஜுஸாக குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மழை காலங்களில் ஏற்படும் புதிய தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
image: istock
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதுடன், சிறுநீரக கற்களையும் கரைத்து வெளியேற்றவும் செய்கின்றது. ரத்த அழுத்தத்தை சந்திப்பவர்களுக்கு எலுமிச்சை ஜுஸ் அருமையான பானமாகும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், தேவையற்ற கொழுப்புகள் கரைவதற்கும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கடுமையான தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள், தொண்டையில் சிறிது நேரம் எலுமிச்சை ஜுஸை வைத்துவிட்டு கொப்பளித்தால் தொண்டை வலி சரியாகும்.
உடல் சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைப்பதற்கும், டென்ஷனில் இருந்து விடுபடவும் எலுமிச்சை ஜுஸ் உதவுகின்றது.
மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால், செரிமானம் மேம்படுவதுடன், உடனடி நிவாரணமும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |