ஞாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? தினமும் 3 கப் காபி குடித்தால் நிகழும் ஆச்சரியம்
தினமும் மூன்று கப் காபி நாம் பருகினால் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் 20 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
காபி
இன்றைய காலத்தில் காபி பிரியர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். நாள் ஒன்றிற்கு ஆறு அல்லது ஏழு முறை காபி பருகுவதை வழக்கமாக வைத்துள்ள நபர்களையும் நாம் அவதானித்து வருகின்றோம்.
இரவு நேரத்தில் காபி பருகுவதால் தூக்க பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், காபிக்கும் ஞாபக சக்திக்கும் தொடர்பு இருப்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
ஆம் நாள் ஒன்றிற்கு மூன்று அல்லது இரண்டு கப் காபி பருகுவதால் ஞாபக மறதி அபாயம் சற்று குறைவதாக கூறப்படுகின்றது.

ஆய்வில் நடந்தது என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் குறித்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் அவர்கள் தினமும் சூடான காபியை பருகியுள்ளனர்.
இவர்களின் நினைவு திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தினை ஒப்பிட்டுப் பார்க்கையில், தினமும் காபி குடிக்காதவர்களை விட 15 முதல் 20 சதவீதம் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மூன்று கப்பிற்கு மேல் டீ அல்லது காபி குடிப்பதால கூடுதல் பலன் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. "மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.
டீ மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் பொருட்கள் நன்மைக்கு காரணமாக இருக்கும் என்றும், இவை வீக்கம், செல் சேதத்தினை குறைத்து நினைவுத்திறன் சரிவை தடுக்க உதவுவதாக கூறுகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |