தினமும் 3 பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு பாருங்க... உடம்பில் அதிக மாற்றத்தை காண்பீர்கள்
தினமும் 3 பேரீச்சை பழத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் விளையும் பேரீச்சை பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளன.
நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி1, பி2, ஏ, கே, மேக்ரோநியூட்ரியன்கள் மற்றும் இயற்கையான இனிப்பு சுவையைக் கொண்ட பேரீச்சை நமக்கு துரிதமான ஆற்றலையும், உடம்புக்கு எண்ணற்ற பலன்களையும் அளிக்கின்றது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், கொலஸ்ட்ராலை கரைப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் பேரீச்சம் பழத்தினை பெரும்பாலும் காலை உணவாகவும், ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிட்டு வருகின்றனர்.
இந்த பதிவில் தினமும் மூன்று பேரீச்சம் பழத்தினை சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கு் என்பதை தெரிந்து கொள்வோம்.
தினமும் 3 பேரீச்சை
100 கிராம் பேரீச்சம்பழத்தில் 64 மி.கி கால்சியம் உள்ளள நிலையில், இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நார்ச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம் அதிகமாக உணவு உண்பதை தவிர்ப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வினைக் கொடுக்கின்றது. ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
இதில் உள்ள பொட்டாச்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்தானது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றது.
பேரீச்சம்பழத்தினை மிதமாக சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான கொழுப்பு அளவை பராமரிக்க முடியும்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாக காணப்படுவதுடன், மாதவிடாய் வலியையும் குறைக்க உதவுகின்றது.
உடம்பில் ரத்தம் குறைவாக இருந்து ரத்த சோகையினால் அவதிப்படுபவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவையும் பேரீச்சம்பழம் அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |