DJD பஞ்சமிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! மேடையில் ஒளிபரப்பபட்ட விசேட காணொளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்.
DJD
கடந்த மார்ச் 1ஆம் திகதி மாஸாக ஆரம்பித்த இந்த நடன நிகழ்ச்சியை விஜய் மட்டும் தொகுத்து வழங்கிவர புதிய சீசனில் மணிமேகலையும் தொகுப்பாளினியாக களமிறங்கியதால் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றது.
மேலும் சினேகா, பாபா பாஸ்கர் நடுவராக களமிறங்க இவர்களுடன் புதியதாக வரலட்சுமி சரத்குமாரும் நடுவராக களமிறங்கியுள்ளார். இந்த நடன நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் நடனம் ஆட வந்த பஞ்சமி என்ற திருமணதான பெண் 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் போதும் தனது அசாத்திய நடன திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் ஒளிபரப்பான ஷோவில் பஞ்சமிக்கு வீடியோ அழைப்பில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் சரத்குமார்.
அதுமட்டுமன்றி போட்டியாளர் பஞ்சமியை தனது வீட்டிற்கு குடும்பத்துடன் விருந்து சாப்பிட வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பஞ்சமி, அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் நடிகர் சரத்குமார் வீட்டிற்கு சென்ற போது பதிவு செய்யப்பட்ட காட்சியை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
