சூறாவளிக்கு பெயர் சூட்டுவது எப்படி தெரியுமா?
கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடங்கி பின்னர் வலுப்பெற்று புயலாக மாறும் இத்தகைய கடல் சீற்ற காற்று மண்டலங்களுக்கு எவ்வாறு மாண்டஸ், கதி, நிவர் என பெயர் சூட்டப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
பெயர் சூட்டும் நாடுகள்
வெப்ப மண்டல சூறாவளிகள் குறித்த தகவல் வழங்குவது, அவற்றிக்கு பெயர் வைப்பது போன்ற முக்கிய பொறுப்பு அதிகாரங்களை அந்த புயல் உருவாகும் பிராந்தியத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்கள் பெற்றுள்ளன.
EOS-06 images Cyclone Mandous. This image combines the cloud structure provided by Ocean Colour Monitor (OCM) with wind vector data derived from the Scatterometer.
— ISRO (@isro) December 8, 2022
OCM also identified algae (coccolithophore) blooming off the coast of Argentina in the South Atlantic Ocean. pic.twitter.com/lexxGyEwDq
இதனுடன் பகுதி அளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் 5க்கும் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் பெயர் சூட்டுகின்றனர்.
இவ்வாறு பெயர் வைக்கும் நாடுகள், சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு சில வானிலை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய சில வழிமுறைகளை பின்பற்றி பெயரை சூட்ட வேண்டும்.
#CycloneMandous will dump up to extremely heavy rains across #TamilNadu from Dec 8-10.
— The Weather Channel India (@weatherindia) December 6, 2022
A #RedAlert will reign over the state on Friday, Dec 9, while an orange alert has been issued for Dec 8 & 10.
Forecast: https://t.co/CoqOklDeSg
Check the thread for district-level alerts?⤵️ pic.twitter.com/mX7Oc6ULSp
பெயர் சூட்டும் விதிமுறைகள்
புயலுக்கு சூட்டப்படும் பெயர் எந்தவொரு அரசியல், கலாச்சாரம், மதநம்பிக்கை, இனம், பிரபலங்களின் பெயர் ஆகியவற்றை பிரதிபலிக்க கூடாது.
உலக அளவில் இருக்கும் எந்தவொரு மக்களின் மனதை புண்படுத்தும் பெயராகவும் இருக்க கூடாது.
பெயர் சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் பெயரின் அளவு அதிகபட்சம் 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்.
RSMC NEW DELHI
நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் பயன்படுத்த கூடாது என்பது போன்ற 9 நிபந்தனைகள் உள்ளன.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 13 நாடுகள் சூட்டும் பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.
அடுத்த 25 வருடங்களில், எப்போது புயல் வந்தாலும் அவற்றுக்கு பெயர் சூட்டுவதற்கான தயார் நிலையில் நாடுகள் இருக்கின்றன.
RSMC NEW DELHI
இந்த வரிசையில் இந்தியா பரிந்துரைத்துள்ள கதி, தேஜ், முரசு, ஆக் ஆகியவையும் உள்ளன.
புயலுக்கு பெயர் சூட்டுவதற்கான காரணம்
புயலுக்கு பெயர் சூட்டுவது அறிவியல் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே, இப்படி பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது, இவ்வாறு வெப்பமண்டல புயலுக்கு பெயர்கள் சூட்டப் படுவதற்கான காரணம் மக்களுக்கு தெளிவான தகவலை வேகமாக பரப்புவதற்கும், புயல் குறித்த தரவுகளை சேகரித்து வைக்கவும் பயன்படுகிறது.
அத்துடன் ஒரே நேரத்தில் இருவேறு புயல்கள் ஏற்பட்டால் புயல் குறித்த குழப்பத்தை மக்களிடம் இருந்து அகற்றவே இவ்வாறு புயலுக்கு பெயர் சூட்டப்படுகிறது.
இந்தியாவின் பொறுப்பு
பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை உள்ளது.
உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் யேமன் ஆகிய 13 நாடுகளுக்கு புயல் தொடர்பான அறிவுரைகள் இந்தியா வழங்கி வருகிறது.
புயலுக்கு பெயர் சூட்டிய நாடுகள்
சோமாலியாவில் 2020 ஆம் ஆண்டு சோமாலியாவில் கரையை கடந்த புயலுக்கு இந்தியா கதி (GATI) என்ற பெயரை பரிந்துரை செய்தது.
அதே ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு வங்கதேசம் நிஷாக்ரா என பெயரிடப்பட்டது.
இதேபோன்று, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக் கடலில் உருவான புயலுக்கு நிவர் என்றும், மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என்றும் ஈரான் பெயர் சூட்டி இருந்தது.
புயல், சூறாவளி, கடும் புயல் இடையே உள்ள வேறுபாடு
வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், கிழக்கு வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும், தென் பசிபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) என்றும், வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoon) என்றும் அழைக்கப்படுகிறது.