நகம் வெட்டும் போது எப்படி சரியான முறையில் எளிதாக வெட்ட வேண்டும் தெரியுமா?
நகங்களை அடிக்கடி பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதில் உள்ள அழுக்குகள் உடலுக்கு செல்வதை தடுக்கும்.
மேலும், நகங்களை எப்படி சரியான முறையில் அடிக்கடி பாரமரிக்க வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்...
* முதலில் நகங்களை மென்மையாக்கிவிட்டு, வெட்டுவதுதான் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்துவிட்டு நகங்களை வெட்டுவதுதான் சரியான நடைமுறை.
* மனக்குழப்பம், டென்ஷனாக இருக்கும் நேரங்களில் நகங்களை கடிப்பது தவறான பழக்கம். அப்போது நகங்களின் உள் அடுக்கு பகுதியையும் சேர்த்து கடித்துவிடுவார்கள்.
அதனால் கூடுதலாக வலி, வேதனையை அனுபவிக்க வேண்டி யிருக்கும். நகத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திடும் நிலையும் ஏற்படலாம்.
* ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை சீராக நகங்களை வெட்டுவதே சரியானது.
* நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் நக வெட்டி கொண்டு வெட்டாதீர்கள். அவைதான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாக்கின்றன. நோய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கின்றன. அந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவுங்கள்.
* ஒருவரது நக வெட்டியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவரே பயன்படுத்தினாலும் நகம் வெட்டுவதற்கு முன்பும், பின்பும் நன்றாக கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் அவசியமானது.
அது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும். சோப்பு, சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம்.