கூந்தல் காடு மாதிரி அடர்த்தியா வளர... கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்து சாப்பிங்க
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும்.
முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.
இதற்காக பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவிட்டும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
கூந்தல் சம்பந்தமான ஒட்டுமொத்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலையை குழம்பு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது ஆனால் இதில் சற்கு கசப்பு சுவை இருப்பதனால் பலரும் இதை விரும்புவதில்லை.
கசப்பு தன்மை கொஞ்சமும் இல்லாமல் அல்டிமேட் சுவையில் கறிவேப்பிலை குழப்பு எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1கட்டு
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு - 10
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 100 மில்லி
உப்பு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 கொத்து
செய்முறை
முதலில், பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், இதில் உறுவி வைத்துள்ள கறிவேப்பிலை தழைகளை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து பொடியாக அரைத்து, தண்ணீர் சேர்த்து மசாலா கரைசல் தயார் செய்யவும்.
இதனிடையே ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியினை ஒரு கோப்பையில் தண்ணீருடன் சேர்த்து ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
தற்போது கறிவேப்பிலை குழம்பு தயார் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் இதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலா கரைசல் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெடி.
இந்த குழம்பை வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் கூந்தல் உதிர்வு கட்டுப்பாட்டுக்குள் வருவது மட்டுமன்றி கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.