கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Manchu
Report this article
அதிகமான சத்துக்களைக் கொண்ட கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.
முடி வளர்ச்சி, கண்பார்வை, ஹீமோகுளோபின் அதிகரிப்பு இவற்றிற்கு சிறந்த தீர்வாக கறிவேப்பிலை இருக்கின்றது. மேலும் இதில் இருக்கும் நன்மைகள் இதோ...
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.
இதில் இருக்கும் குரோமியர் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இதில் இருக்கும் பாக்டீரியா, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்த்து சமைக்கலாம். முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. ஒரு நாளைக்கு 10-20 கறிவேப்பிலையை சாப்பிடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |