இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஊர்காவற்துறை துறைமுகம்: தற்போதைய நிலை!
இலங்கையின் வட மாகாணத்தில் பண்டைய காலத்தில் சிறப்பு மிக்க துறைமுகமாக விளங்கியது ஊர் காவற்துறை ஆகும்.
லைடன் தீவு என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத் தீவின் வட மேற்கில் ஊர்காவற்துறை அமைந்துள்ளது.
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பு ஒன்று இதை தணதீவு எனவும் குறிப்பிடுகின்றது. கிறிஸ்துவுக்கு முன் 6ம் நூற்றாண்டில் இருந்து ஊர்காவற்துறை துறை முகமாக இருந்தது என சரித்திர ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள்.
ஊர்காவற்துறை துறைமுகமானது இயற்கை துறைமுகமாக அமைந்து காணப்படுகின்றது. இலங்கைத் தீவிலும் யாழ்ப்பாண இராச்சியத்தினதும் வட நீர்ப்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பினை இத் துறைமுகம் பெற்றுள்ளது.
இதன் தற்போதைய நிலை மற்றும் வரலாற்று சிறப்புக்கள் குறித்து முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |