கொளுத்தும் வெயிலுக்கு இதமான வெள்ளரிபழம்... அறுவடையை ஆரம்பித்த இலங்கை றீ(ச்)ஷா
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் வெயில் காலத்துக்கு ஏற்றாற்போல் வெள்ளரிப்பழ பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைக்கு தயாராகியுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மண் விவசாயத்துக்கு உகந்த மண் இல்லை என்றாலும் மண்ணின் தன்மையை மாற்றி கொய்யா,மாதுளை, வெள்ளிப்பழம் என பல்வேறு பழங்கள் வெற்றிகரமாக பயிரிடப்படுகின்றன.
சொட்டு நீர்ப்பாசன பொறிமுறையின் மூலம் மண்ணின் ஈரப்பதன் பேணப்படுவதால் வேர்களுக்கு ஈரப்பதன் எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த பண்ணையில், பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கொளுத்தும் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை தணிக்ககூடிய வெள்ளரிபழம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |