நடிப்பை விட்டு விலகினாலும் 48 வயதில் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் சினிமாத்துறையில் நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மீனா சொத்து மதிப்பு
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர். இவர் முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகினார். இவரை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது நடிகர் ராஜ்கிரண் தான்.
இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பலருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளார். இவருடைய கணவர் சமீபத்தில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் இறக்க முன்னர் நடிகை மீனா மற்றும் மகளின் பெயரில் அவரின் அனைத்து சொத்தையும் எழுதி வைத்தார். மீனாவின் மகளும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு மட்டுமே 35 கோடியில் இருந்து 40 கோடிவரை இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர இவருக்கு சொந்தமான கடைகளும் சொந்தமான வேறு பிஸ்னஸ்களும் உள்ளது. அவை என்ன என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |