The New Me என விவாகரத்திற்கு பின் ஜெயம் ரவி வெளியிட்ட புகைப்படம்... வேற என்ன பண்ணிருக்காரு தெரியுமா?
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின்னர் தனது சமூக வளைத்தள பக்கத்தில் தற்போது The New Me என பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி, தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான்.
அவரது தாய் சுஜாதாவும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார். விரைவில் ஜெயம் ரவி நடிப்பில் Brother திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியும் நேற்று இடம்பெற்றது.
அதில் எப்போதும் இல்லாதது போல் மிகவும் கலாட்டாவாக பேசியது, மேடையில் நடனம் ஆடியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமன்னி Brother பட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு The New Me என பதிவு செய்துள்ளதுடன், தனது மனைவி ஆரத்தியை இன்ஸ்டாவில் அன்-பாலோ செய்துள்ளார்.
அத்துடன் ஆர்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். அதோடு விவாகரத்து எனது சொந்த விஷயம் அதை அப்படியே விட்டுவிடுங்கள்.
ஒரு பிரபலத்தை தவறாக வைத்து பேசப்படுகிறது, அதையெல்லாம் செய்யாதீர்கள் என பேட்டியும் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன் ஜெயம் ரவியின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |