தோல்வில் இருந்து மீண்ட சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்... முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்! கொண்டாடும் ரசிகர்கள்

dhoni cskwin M.K.Stalin CSKvKKR Udhay
By Rooban Oct 15, 2021 07:09 PM GMT
Rooban

Rooban

Report

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வென்று நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது.

சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய பாப் டுப்ளஸ்ஸி 86 ரன்கள் அடித்து விளாசினார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க சுபமான் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பான ஒரு தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது.

இரண்டு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இதில் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதில் 5 பவுண்டரி, 3 சிக்சரும் அடங்கும். நிதானமாக ஆடிய கில் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னுக்கும், தினேஷ் கார்த்திக் 9 ரன்னுக்கும், சாகிப் அல் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக பெறுகிறது. இந்நிலையில், சென்னையின் வெற்றியை குறித்து பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதில், “அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கர்ஜித்துள்ளது. அணியின் வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதுமுள்ள சென்னை அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினும், அவரின் ட்விட்டர் பக்கத்தில், “தோல்வியில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள @msdhoni தலைமையிலான @ChennaiIPL அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும்- அணி நிர்வாகம் & சென்னை அணியின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.    

[Fantabulous performance from @ChennaiIPL!


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US