பாட்டிலில் கல்லை போட்டு தாகம் தீர்த்த புத்திசாலி காகம் - வைரலாகும் வீடியோ
பாட்டிலில் கல்லை போட்டு தாகம் தீர்த்த புத்திசாலி காகத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தாகம் தீர்த்த புத்திசாலி காகம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
காகம் ஒன்று தண்ணீர் குடிக்க விரும்பியது. அங்கே இருந்த பாட்டிலில் தன்னுடைய அலகை வைத்து தண்ணீர் குடிக்க முயற்சி செய்தது.
ஆனால், அதனால் முடியவில்லை. உடனே அருகில் இருந்த கற்களை எடுத்து அந்த தண்ணீர் பாட்டிலில் போட்டது. தண்ணீர் மேலே வந்ததும் காகம் தாகத்தை தீர்த்துக் கொண்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நாங்கள் அந்த காலத்தில் படிக்கும்போது, பாடத்தில் காக்கா கதையை படித்திருக்கிறோம்.
இந்த வீடியோவைப் பார்க்கும்போது அந்த நினைவுகள் எங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இந்த புத்திசாலி காகம் எவ்வளவு அழகாக முயற்சி செய்துள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Using stones to achieve things I think crows are peacefuls. https://t.co/E5dncHiXa6
— sathya narayanan ?? (@sathya0709) April 1, 2023