குளித்துக் கொண்டிருந்த பெண்ணை கடித்துக் கொன்ற முதலை.. பதற வைக்கும் காணொளி
ஒடிசா மாநிலத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை ஒன்று கடித்து கொன்ற காட்சி வைரலாகி வருகின்றது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பலட்பூர் கிராமத்தில் வசித்து வந்த ஜோத்ஸ்னா ராணி(35) என்ற பெண் பிருபா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.
திடீரென ஆற்றுக்குள் கிடந்த முதலை அவரை இழுத்துச் சென்றுள்ளது. குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இக்காட்சியில் குறித்த பெண்ணை முதலை தாடைகளுக்கு இடையே வைத்து இழுத்துச் செல்வதும், அவரை துண்டு துண்டாக கிழித்து விழுங்குவதையும் காணமுடிகின்றது.
சம்பவம் அறிந்து சம்பவ இடத்தில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சில நிமிடங்கள் தேடுதலுக்கு பின்பு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
முதலை நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ஆற்றில் குளிக்க செல்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |