கொரோனா தடுப்பூசி போட்டால் கர்ப்பமாவதை தடுக்க வேண்டுமா? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் முதல் இரண்டு மாதங்கள் வரை கர்ப்பமடைவதை தாமதப்படுத்துமாறு இந்தியாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் கருவுறுதல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளை ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக கூறப்படுகிறது.
இதனால் பல நாடுகளும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பல்வேறு பகுதிகளிலும் போடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் முதல் இரண்டு மாதங்கள் வரை கர்ப்பமடைவதை திட்டமிடுவதை தாமதப்படுத்துமாறு இந்தியாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் கருவுறுதல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி பயன்படுத்துவதை எதிர்த்து உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஒரு நாளுக்குப் பிறகு (அதிக ஆபத்து உள்ளவர்கள் அல்லது கடுமையான பாதிப்பு உள்ளவர்களை தவிர) இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. தடுப்பூசிக்கு முன்னர் கர்ப்ப பரிசோதனையை பரிந்துரைக்கவோ, தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின்னர் கர்ப்பத்தை தாமதப்படுத்தவோ தாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று WHO கூறியது. இருப்பினும், பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக WHO குறிப்பிட்டுள்ளது.
இதனை ஒருவர் போட்டுக்கொள்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறது.
மருத்துவ நிபுணர் சுமன் சிங் கூறுகையில், நான் தடுப்பூசி போட வேண்டாம் என்று பரிந்துரைக்கவில்லை, மாறாக தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது இரண்டு மாதங்களாவது தம்பதியினர் ஒரு குழந்தைக்கு திட்டமிடுவதை தாமதப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.