ஆசனவாய் மூலம் கொரோனாவை கண்டறியும் சீனா.. எப்படி இருக்கும் தெரியுமா? பதறிப்போன மக்கள்
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இதுவரை ஒரு ஆண்டு நிறைவடைய போகிறது. தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் வேளையில், கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறிய பிசிஆர் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
பிசிஆர் பரிசோதனையில் மூக்கு மற்றும் வாய் மூலம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அதை பரிசோதனை செய்வதன் மூலம், கொரோனா தொற்று பாதித்திருக்கிறதா என்பதை கண்டறிய முடியும்.
இந்த சோதனையில் முடிவுகள் வர தாமதமானாலும் துல்லியமாக இருக்கும். இந்நிலையில், சீனாவில் ஆசனவாய் கொரோனா பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சில பகுதிகளில் ஆசனவாயில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆசனவாய் கொரோனா பரிசோதனைகள் மூலம், மக்களிடையே கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் வேகமாக உயரும் என சீன மருத்துவர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.
ஆசனவாய் கொரோனா பரிசோதனைக்கு கூறப்படும் அறிவியல் காரணத்தை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, சுவாசப் பாதையைக் காட்டிலும் ஆசனவாயில் நீண்ட நேரத்துக்கு இருக்கும் என சீனாவை சேர்ந்த மூத்த மருத்துவ வல்லுநரான லி தொங்ஜெங் தெரிவித்துள்ளார்.