நாயை அடுத்து தேனீக்கள் மூலம் கொரோனாவை கண்டறிய பரிசோதனை! அசத்தும் ஆராய்ச்சியாளர்கள்
கொரோனா வைரஸ் ஆனது ஒரு நபரை தாக்கினால், கண்டறிய RTPCR சோதனை செய்யப்படுகிறது.இதன் முடிவுகள் வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகின்றது.
ஆனால், அதற்குள் அவர்கள் தனிமைப்படுத்துவதை தவிர்த்தால் பலருக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், நெதர்லாந்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எளிதில் கண்டறிய புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், தேனீக்களுக்கு பயிற்சி அளித்து, தேனியின் நகர் திறன் மூலமாக கொரானா வைரஸை கண்டறிய முடிவதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதன் காரணமாக ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை சில நொடிகளில் கண்டறிய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விலங்குகள் மூலம் வைரஸை கண்டறிய எடுக்கப்படும் முதல் முயற்சி இதுவல்ல. இதற்கு முன்னதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாய்களின் மோப்ப சக்தி மூலமாகவும், கொரோனா வைரஸை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில் 94 சதவீத நாய்கள் சரியாக கொரோனா வைரஸை கண்டறிவதாக அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.