நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கு- குடும்ப நல நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
நடிகர் ரவி- ஆர்த்தி தம்பதி இடையேயான விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
ரவி மோகனுக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
நீதிமன்ற உத்தரவு
தீவிரப்படுத்தப்படும் இறுதி முடிவுகள்.. தனக்கு தானே சத்தியம் செய்யும் போட்டியாளர்கள-பரபரப்பான நொடிகள்
இந்த நிலையில், விவாகரத்து வழக்கு நேற்றைய தினம் சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது.
அதில், ரவி மோகன்- ஆர்த்தி இருதரப்பும் காணொளி மூலம் ஆஜராகியிருந்தனர்.
அப்போது ரவி, ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதனை கேட்ட நீதிபதி, “சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்தபின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15 ம் தேதி தள்ளி வைத்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |