தம்பதிகளுக்கு இடையில் அதிகம் சண்டை வருதா? உப்பு, மிளகு பரிகாரம் செய்து பாருங்க
குடும்பத்தில் எப்போதும் பிரச்சினையாகவே இருக்கின்றதா? கணவனும் மனைவியும் எப்போதும் சண்டை இட்டுக்கொண்டே இருக்கின்றார்களா?
இதனால் வீட்டில் இருக்கும் ஒரு சிலருக்கும் நிம்மதி இல்லாமல் தான் இருக்கும்.
அதற்கு காரணம் வீட்டில் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் தினமும் சண்டை இட்டுக்கொண்டு இருந்தால், அந்த சூழலில் இருக்கும் மற்றவர்களையும் அது பாதிக்கும் என்று கூறலாம்.
சண்டை இல்லாமல் எப்போதும் சந்தோஷமாகவும் காதலுடனும் சேர்ந்து வாழ ஒரு சில பரிகாரங்கள் உள்ளது.
அதை எப்படி படிமுறையின் கீழ் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
உப்பு மற்றும் மிளகினால் ஒருவரை நிச்சயமாக வசியம் செய்துவிட முடியும். அதாவது அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் முடியும்.
இதை குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நமக்கு மனதில் தோன்றும் நேரத்தில் இதை செய்து விடலாம்.
இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.
பரிகாரம் செய்யும் முறை
-
சுத்தமாக நீராடி, பூஜை அறையில் ஒரு கண்ணாடி குவளையை எடுத்து சென்று அமைதியா அமர வேண்டும்.
-
அதில் முக்கால் அளவிற்கு தண்ணீரை நிறைத்துக்கொள்ளவும்.
- பின்னர் 27 மிளகும் 27 கல் உப்பும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
-
பின் ஒவ்வொறு உப்பையும் மிளகையும் மாறி மாறி அந்த தண்ணீர் நிரப்பி இருக்கும் குவளையில் போட வேண்டும்.
- நானும் என் கணவரும் வழமைப்போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும். சண்டை என்பது நம் வாழ்வில் வரக்கூடாது என்று உங்களுக்கு தேவையானவையை வேண்டி இதை செய்ய வேண்டும்.
-
இறுதியாக அனைத்தையும் போட்டி முடிந்தவுடன் ஓடும் நீரில் அதை கொட்டிவிட வேண்டும். நீர் நிலைகள் இல்லையென்றால் கால பாடாத ஒரு இடத்தில் ஊற்றலாம்.
இதை செய்தால் நீங்கள் உங்கள் துணையுடன் சந்தோஷமாக வாழ முடியும். ஒரு சில நாட்களின் நல்ல பலனையும் எதிர்ப்பார்க்கலாம்.