உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா? வீட்டிலிருந்தே எவ்வாறு தெரிந்து கொள்வது

india corona sanitizer mask
By Manchu Apr 27, 2021 11:44 AM GMT
Report
Courtesy: Hindu Tamil

கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற பதற்றம் இல்லாமல் நாம் செய்யவேண்டிய செயல்கள் என்னென்ன? நமது வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா குறித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு கொரோனா நோயாளி சமூக விலகல் நடவடிக்கையைப் பின்பற்றாவிட்டால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 406 பேருக்கு கரோனா தொற்று பரவக்கூடும்.

அதேசமயம், அந்த கொரோனா நோயாளி சமூக விலகலைக் கடைப்பிடித்து, கொரோனா தடுப்பு விதிகளை 50 சதவீதம் வரை கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

அதே கொரோனா நோயாளி, சமூக விலகல் விதிகளையும், கொரோனா கட்டுப்பாடுகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 2 அல்லது 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா? வீட்டிலிருந்தே எவ்வாறு தெரிந்து கொள்வது | Corona Virus House Test

இதேபோன்று தற்போதுள்ள நிலையில் சிறிய இருமல், காய்ச்சல் இருந்தால் கூட கரோனாவோ என்கிற சந்தேகமும், பயமும் வருகிறது. இதனால் பதற்றம் ஏற்பட்டு கவலைப்படுவோர் அதிகம். அதே நேரம் கொரோனா தொற்று ஏற்பட்டும், சாதாரண காய்ச்சல் என ஒதுக்குவோர் முற்றும்போது பாதிக்கும் நிலை வரலாம்.

சந்தேகம் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்வது அல்லது ஸ்க்ரீனிங் சென்டருக்குச் செல்வது சிறந்தது. முகக்கவசம் அணிவதும் தற்போதுள்ள இரண்டாம் அலை பரவலில் இரட்டை முகக்கவசம் அணியும் தேவை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன?

முகக்கவசம் அணிதல், இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல்.

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி அணிவது?

குறைந்தது ஐந்து N-95 முகக்கவசங்களாவது வாங்கி வைத்திருக்க வேண்டும். அவற்றை ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் வைரஸ் செயலிழக்கும் வரை அவற்றைக் காய வைக்க வேண்டும் (குறைந்தது 72 மணி நேரம்). அவற்றைத் துவைக்க வேண்டாம்.

பயன்பாட்டுக்கு இடையே அவற்றைத் தொங்கவிட்டுக் காய வைக்கலாம் அல்லது சுத்தமான, காற்று புகக்கூடிய பேப்பர் பைகள் போன்றவற்றில் காய வைக்கலாம். முகக்கவசங்கள் ஒன்றின் மேல் ஒன்று படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலும் உங்கள் முகக்கவசங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

அல்லது செலவைக் குறைக்க இன்னொரு வழியைக் கையாளலாம்: இரண்டு முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள் - ஒரு சர்ஜிக்கல் முகக்கவசம், ஒரு துணியினாலான முகக்கவசம். (குறிப்பு: சர்ஜிக்கல் முகக்கவசத்தை 8 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்)

உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா? வீட்டிலிருந்தே எவ்வாறு தெரிந்து கொள்வது | Corona Virus House Test

தடுப்பு முறைக்கு எப்போதும் தயாராக இருங்கள்

முடிந்தவரை விரைவாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவில் தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வது 70-80% தொற்று ஏற்படாமலும், 90% தீவிர நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.

எந்த உபகரணங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டும்?

  1. தெர்மோமீட்டர் உடல் வெப்பத்தை அளக்க உதவும்.
  2. பல்ஸ் ஆக்சிமீட்டர் உங்கள் ஆக்சிஜன் அளவைக் கணிக்க உதவுவது.
  3. பாராசிட்டமால் காய்ச்சல் மாத்திரை
  4. Otrivin nasal drops - மூக்கில் விடப்படும் திரவம்
  5. ORS solution - வயிற்றுப்போக்குக்கு ஈடு செய்யும் மருத்துவக் கரைசல்
  6. விட்டமின் சி மாத்திரை- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
  7. Zinc plus Vitamin B- எதிர்ப்பு சக்திக்காக
  8. Pantocid - வயிற்றுப்போக்குக்காக
  9. Vaporiser machine for steam inhalation - ஆவி பிடிப்பதற்காக

கோவிட் 19-ன் முதல் அறிகுறி தென்பட்டால், தடுப்பூசி போட்டிருந்தாலும், இதற்கு முன்பு தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அறிகுறியின் முதல் நாள், நோயின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.

உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா? வீட்டிலிருந்தே எவ்வாறு தெரிந்து கொள்வது | Corona Virus House Test

கோவிட் 19 அறிகுறிகள் என்னென்ன?

  1. காய்ச்சல் அல்லது குளிர்
  2. இருமல்
  3. சுவாசிப்பதில் சிரமம் அல்லது குறைவான சுவாசம்
  4. சோர்வு
  5. உடல் அல்லது தசை வலி தலைவலி
  6. சுவை அல்லது வாசனைத் திறன் இழப்பு
  7. தொண்டை வலி சளி அல்லது மூக்கு ஒழுகுதல்
  8. மயக்கம் அல்லது வாந்தி
  9. வயிற்றுப்போக்கு 

காய்ச்சலைத் தவிர உங்களுக்கு வேற எந்த அறிகுறியும் இல்லையென்றால் உங்களுக்குத் தேவை பாராசிட்டமால் மட்டுமே.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவசர சிகிச்சை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்:

  1. சுவாசிப்பதில் சிரமம்.
  2. நெஞ்சுப் பகுதியில் நீடித்த வலி அல்லது அழுத்தம்
  3. புதிய குழப்பம்
  4. தூக்கத்திலிருந்து கண்விழிக்க இயலாமை அல்லது தொடர்ந்து விழித்திருக்க இயலாமை.
  5. தோலின் நிறத்தைப் பொறுத்து வெளிர், சாம்பல் அல்லது நீல நிற தோல், உதடுகள் அல்லது நகக் கண்கள்.

உங்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டால்?

அடுத்தவர்களிடமிருந்து விலகி இருங்கள். மற்றவர்களும் உடன் இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

ஓய்வெடுத்துக் கொண்டு உங்களுக்கான திரவங்களைத் தொடர்ந்து உட்கொள்ளுங்கள். உதாரணம்: ORS

தெர்மாமீட்டரைப் பயன்படுத்தி உங்களுடைய உடல் வெப்பத்தைத் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பல்ஸ் ஆக்சிமீட்டர் உதவியுடன் உங்கள் ஆக்சிஜன் அளவைக் கணக்கிடுங்கள். அது டிஜிட்டல் முறையில் உங்கள் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு மற்றும் நாடித் துடிப்பு இரண்டையும் கணக்கிடும். ஓய்வெடுக்கும் நேரத்தில் உங்கள் ரத்த ஆக்சிஜன் அளவைக் கணக்கிடுங்கள்.

நிமிட வேகமான நடைக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுங்கள். இரண்டு அளவீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை இதைச் செய்யுங்கள். உங்களுடைய குறைந்தபட்ச அளவு 94க்குக் கீழ் சென்றால் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுக்கான உதவி வரும்வரை, உங்கள் வயிறு, நெஞ்சு ஆகியவை தரையில் படுமாறு குப்புறப்படுங்கள்.

உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா? வீட்டிலிருந்தே எவ்வாறு தெரிந்து கொள்வது | Corona Virus House Test

உங்களுக்கு என்ன மருந்துகள் தேவை?

Remdesivir/ Tocilizumab போன்ற மருந்துகள் உங்களுக்கு எப்போது தேவை என்பதை உங்கள் மருத்துவரை முடிவு செய்ய அனுமதியுங்கள். அவை மிகவும் குறைவான சூழல்களில் மட்டுமே பலனளிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

அவற்றைப் பரிந்துரை செய்யக் கோரி உங்கள் மருத்துவருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். தேவையற்ற பரிந்துரைகளே இன்றைய தட்டுப்பாட்டுக்குக் காரணம். மற்ற மருந்துகளைச் சுயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US