கொரோனா பரோட்டா போய்.. அடுத்து கொரோனா வடையா? ஆடிப்போன பார்வையாளர்கள்;
கொரோனா என்ற ஒரு கொடிய வைரஸ் உலகமெங்கும் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கும் வேலையில், பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும், என்ன செய்தாலும் கொரோனா குறையவும் அதிகரிக்கவுமே இருப்பதால், உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஓமிக்ரோனும் பரவத்தொடங்கியுள்ளன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இதற்கு எல்லாம் விழிப்புணர்வு செய்யும் விதமாக பலரும் கொரோனா போல் வேடம் அணிந்தும், தெரு தெருவுக்கு குறிசொல்வதும், கொரோனாவில் பரோட்டா செய்வது என பல விஷயங்கள் மூலம் விழிப்புணர்வு செய்து வந்தார்கள்.
அந்த வகையில், பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வடிவம் கொண்ட வடையை சுட்டு காட்டுகிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்து இருக்கிறது.
Corona vada! Bharat ki naari sab par bhaari! .@arindam75 pic.twitter.com/sf1zoLPih2
— Mimpi? (@mimpful) January 19, 2022