படுக்கை இல்லாததால் ஏற்பட்ட அவலம்... ஆட்டோவில் கொரோனா நோயாளி படும் அவஸ்தை
கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் படுக்கை இல்லாத காரணத்தினால் ஆட்டோவில் இருந்து வைத்தியம் பார்க்கும் அவலம் இந்தியாவில் நடந்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, நாளுக்குநாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலபுரகி மாவட்டத்தில் 55 வயது பெண் ஒருவர் சளி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரை கலபுரகி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், அங்கு படுக்கை இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதே போன்று அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லை என்று கூறியதால், ஜிம்ஸ் மருத்துவமனை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்டோ ஒன்றில் வைத்து வைத்தியம் பார்க்கப்பட்டு வருகின்றது.
ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வரும் அவலம் அரங்கேறி உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.