கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரம் பேர் பலி.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பு!
உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆட்டிபடைக்கும் நேரத்தில், இந்தியாவிலும் அதன் வீரியம் அதிமாகி கொண்டிருக்கிறது.
அன்றாடம், 3 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி வந்தது. நேற்று முன்தினம் கொரோனா பரவல் சற்றே குறைந்து 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 2,771 பேர் பலியாகி இருந்தனர்.
நேற்று பலி மேலும் எகிறியது. 24 மணி நேரத்தில் 3,293 பேர் பலியாகி உள்ளனர். ஒரு நிமிடத்துக்கு 2 பேருக்கு மேல் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளைத் தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.