கொரோனா ஐசியூவில் அரங்கேறிய அவலம்! தவறினால் கண்முன்னே உயிரிழந்த நோயாளிகள்
உலகம் முழுவதும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
மக்கள் ஆக்சிஜன், மருந்து, ஆம்புலன்ஸ், படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் காணொளியாக கண்கலங்க வைத்துள்ளது.
கொரோனா பாதித்த நோயாளிகள் வெளியிலிருந்து அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டால், உயிர் பிழைத்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலையில், அங்கு நடந்த அவலங்களை நபர் ஒருவர் அனுபவித்த கொடுமையினையும் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியினை வெளியிட்ட நபர், தனது மனைவியை ஐசியூ-வில் வைத்துக்கொண்டு பட்ட வேதனையினையும், இதனை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆதங்கத்தில் காணொளியில் பல உண்மைகளை உடைத்துள்ளார்.
இக்காணொளியினை வெளியிட்ட எனது உயிரினையும் எடுக்கலாம் என்று தனது ஆதங்கத்தினை கொட்டியுள்ளார். பாலியல் நினைப்பில் உள்ளே சுற்றும் திருநங்கைகள், ஆக்ஸிஜன் மாஸ்க் சரியாக மாட்டாமல் பரிதாபமாக உயிரிழந்த நோயாளிகள் என அனைத்தையும் கண்முன் பார்த்ததை மிகவும் துணிச்சலாக கூறியுள்ளார்.