கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி... கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் கூடுதலாகவே இருக்கின்றது.
இந்நிலையில் கொரோனா நிவாரணத்திற்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் முதல்வரை சந்தித்து நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
தற்போது பள்ளிக் குழந்தைகளும் தங்களால் முடிந்த நிதியுதவி கொடுத்து வரும் நிலையில்f, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி வருண்யா தேவி ரூ.2000 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.
தனது பிறந்தநாள் செலவிற்கு சேர்த்து வைத்த தொகையினை, திமுக மகளிரணி தலைவர் கனிமொழியிடம் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி “ தூத்துக்குடி சிறுமி வருண்யா தேவி தன் பிறந்த நாள் செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ2000ஐ என்னிடம் அளித்தது என்னை நெகிழ வைத்தது.
இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து புதுமுனைப்போடு வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கையினை எனக்கு அளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி சிறுமி வருண்யா தேவி தன் பிறந்த நாள் செலவீனத்திற்காக சேமித்து வைத்திருந்த ₹2000ஐ என்னிடம் அளித்தது என்னை நெகிழ வைத்தது.இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து புதுமுனைப்போடு வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கையினை எனக்கு அளித்தது. pic.twitter.com/pvorGXj3W2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 14, 2021