வாயில் செல்களை அழிக்கும் கொரோனா... புதிய அறிகுறியால் பீதியில் மக்கள்
கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் புதிதாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வாய்ப்பகுதியை அதிகமாக பாதிக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்படுகின்றது.
காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல், சுவையினை இழத்தல் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் வாய்ப்பகுதி அதிகமாக பாதிக்கப்படுவதுடன் உதடு வெடிப்பு அல்லது கொப்புளங்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
தற்போது மனித உடலில் பல பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உருமாறியிருப்பதாகவும், வாய்ப்பகுதியில் உள்ள செல்களை அழித்து, வாய் மற்றும் உதடு வறண்டு போவதுடன் இவ்வாறு புண்கள் ஏற்படுகின்றது.
மேலும் செரிமானப்பகுதியினை தாக்குவதுடன் நுரையீரலையும் பாதிக்கின்றது தெரிந்த நிலையில், தற்போது வாயில் ஏற்படும் பாதிப்புகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.