முதல்வன் பட பாணியில் களத்தில் இறங்கி ஸ்டாலின் செய்த காரியம்... பெரும் வைரலாகும் காணொளி
சென்னையில் கட்டளை மையத்தினை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அழைப்பினை ஏற்று போன் பேசியுள்ள காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று இரவு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த கட்டளை மையம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் 104 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பெறப்படும் பொதுமக்களின் அழைப்புகள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்நிலையில், இந்த மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டதோடு, அப்போது வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியுள்ளார்.
குறித்த அழைப்பில் பேசியவ வானகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கோரிக்கையை ஏற்று, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார்.
முதல்வர் பட பாணியில் களத்திற்கே வந்து ஸ்டாலின் செயல்பட்ட விதம் மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதொடு, குறித்த காணொளியும் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம். pic.twitter.com/0O2URuDTiv