கொரோனா மையத்தில் திடீர் தீவிபத்து... 12 நோயாளிகள் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல சோக நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றது.
உலகளவில் தற்போது இந்தியாவிலேயே பாதிப்பு அதிகமாக இருப்பதால் பல நாடுகள் இந்தியாவிற்கு வருவதை தடை செய்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்ததுடன், பலர் காயம் பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றியதோடு, தொடர்ந்து மீட்புப்பணிகளும் நடைபெற்று வருகின்றது.
ஏற்கெனவே, நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.