கணவனோடு இருக்காதீர்கள்... கொரோனா அதிகரிப்பால் சீனா போட்ட அதிரடி உத்தரவு!
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்த நிலையில், புதிய தடையை அறிவித்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகமெங்கும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்ட நிலையில், சீனாவில், தற்போது மீண்டும் பிரச்னை ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஷாங்காய் நகரில் 2.6 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்வை சநத்தித்து வருகிறது.
இதனால் கடும் கட்டுப்பாடுகளை விதித்த சீனா ஷாங்காய் நகரைத் தாண்டி மற்ற பகுதிகளுக்கும் கொரோனா பரவினால், இன்னும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அவசரமாக தரையிறக்கத்தின் போது இரண்டாக பிளந்த விமானம் - பதற வைக்கும் வீடியோ!
புதிய கட்டுப்பாடுகள்
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கட்டுப்பாடுகளை ஷாங்காய் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, உங்கள் ஆசை, சுதந்திரத்தை கொஞ்ச நாட்களுக்கு கட்டுப்படுத்தி வையுங்கள். ஜன்னலை திறந்து பாட்டுப் பாட வேண்டாம்.
இதனால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இன்று முதல் தம்பதிகள் ஒன்றாக தூங்க வேண்டாம். தனியாக தூங்கவும். முத்தமிடவும், கட்டியணைக்கவும் அனுமதியில்லை. தனித்தனியே சாப்பிட்டுக் கொள்ளவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி' என்று என எச்சரிக்கின்றனர்.
மேலும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ட்ரோன்கள் மூலமாக நேரடியாக வீடுகளுக்கே சப்ளை செய்யப்படுகிறது.
இதன்பின் ஆண்களை விட்டு விலகி இருக்கும்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.