viral video: அச்சுறுத்திய நபரை வெறியோடு கடிக்க பாய்ந்த பாம்பு... பலரும் கண்டிராத பதறவைக்கும் காட்சி!
பாம்பொன்று வித்தியாசமாக தனது உடலை சுருட்டிக்கொண்டு பாய்ந்து, பாய்ந்து கடிக்க வந்த காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சோளப் பாம்பு எனப்படும் இந்த corn snake சிவப்பு எலி பாம்புகள் என்றும் அழைக்கப்படுகின்றது. இது வட அமெரிக்காவை சேர்ந்த ஒரு எலிப்பாம்பு இனமாகும்.
இருப்பினும் தென்கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்க பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்த பாம்புகள் அதன் இரையை சுருட்டுவதனால் அடக்கி பின்னர் வேட்டையாடுகின்றது.
இவை நச்சுத்தன்மையற்றவை மற்றும் பொதுவாக அடக்கமானவை, அவை மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது. ஆனால் மனிதர்களை அல்லது அவற்றை அச்சுறுத்தும் விலங்குகளை காணும் போது அவற்றின் தற்காப்பு தோரணையானது பார்ப்பதற்கு பயமுறுத்தும் வகையில் தோற்றமளிக்கும்.
இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு தோற்த்தை பெரிதாக்கி காட்டுகின்றன. அப்படி தன்னை அச்சுறுத்திய நபரை பாய்ந்து தாக்கிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |