Cooku With Comali: நடிகர் விஜய் சேதுபதி வைத்த சிக்கன் 65
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் சேதுபதி செய்த சிக்கன் 65 மசாலா தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
தேவையான பொருட்கள்
4 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் சீரகம்
1 கைப்பிடி கொத்தமல்லி இலை
1 துண்டு இஞ்சி
8 பூண்டு
1 கைப்பிடி புதினா
250 கிராம் சிக்கன்
பொறிக்கும் அளவு எண்ணெய்
மல்லித்தூள்- அரை ஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
மிளகு தூள்- கால் ஸ்பூன்
தயிர்- 3 டேபிள் ஸ்பூன்
1 ½ ஸ்பூன்- அரிசி மாவு
உப்பு
எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸி ஒன்றில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கொஞ்சம் புதினா, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனில், அரைத்த மசாலாவை சேர்க்கவும். தொடர்ந்து மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகு தூள், தயிர், அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 2 மணி நேரம் வரை ஊற வைத்து, பின்பு பொறித்து எடுத்தால் விஜய் சேதுபதி கூறிய சிக்கன் 65 தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |