விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்... தற்போதைய நிலை என்ன?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி விபத்தில் சிக்கி மீண்டுள்ளதாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி பவித்ரா
குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்து கொண்ட பவித்ரா, மாடலிங் துறையை சேர்ந்தவர் ஆவார். கொரோனா காலத்தில் வீட்டில் சமையல் செய்ய துவங்கிய அனுபவத்தை வைத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல் வரை சென்றார்.
இந்நிகழ்ச்சி இவருக்கு பெரிய திருப்பு முனையாக இருந்த நிலையில், வெள்ளித்திரையில் வாய்ப்புகளையும் கைப்பற்றியுள்ளார். நாய் சேகர் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் இவர், சில வாரங்களாக தன்னைப் பற்றின எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார்.
இதனால் ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு பவித்ரா கொடுத்த பதில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தான் விபத்தில் சிக்கியதாகவும், 3 வாரங்கள் ஆகிவிட்டது... தற்போது மெல்ல மீண்டு வருவதாகவும், கூறியுள்ளார். பவித்ராவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |