பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார் பிரபல சமையல் கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவருமான செஃப் தாமு, உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செஃப் தாமு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றவர் செஃப் தாமு.

உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தனது பயணத்தைத் தொடங்கி, கடின உழைப்பால் உயர்ந்து பத்மஸ்ரீ விருதையும் கின்னஸ் உலக சாதனையையும் படைத்தவர்.
விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்று, தனது தனித்துவமான அணுகுமுறையால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.

உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அண்மைக்காலமாகச் சில சிரமங்களை எதிர்கொண்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகள் சமையல் செய்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்ததன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
சமையல் துறையில் தனது திறமையாலும் சாதனைகளாலும் தனி முத்திரை பதித்த செஃப் தாமுவின் மறைவு, ரசிகர்களுக்கும் சமையல் துறையினருக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |