குக் வித் கோமாளி வைல்ட் கார்டில் வெற்றியாளர் இவர் தானாம்: குவியும் பாராட்டு
‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டில் வெற்றியாளர் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சி காமெடியை அடிப்படையாகக் கொண்டு நடந்துவருவதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது ‘குக் வித் கோமாளி’ 3 சீசன்களையும் கடந்து 4 சீசன் நடந்துக் கொண்டிருக்கிறது.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ், குரேசி, சுனிதா, தங்கதுரை, ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன்,மோனிஷா, சில்மிஷ சிவா, ரவீனா உட்பட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்றனர், நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்ஷன் தொடர்கிறார்.
போட்டியாளர்களாக ஷிவாங்கி, நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, நடிகர் ராஜா ஐயப்பா, விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா உட்பட 10 பேர் பங்கேற்றனர்.
வெற்றியாளர் இவர்தானாம்?
இந்நிகழ்ச்சியில், நடிகர் ஆனந்த் பாபுவின் மகன் கஜேஷ், நடிகர் கிரண் ஆகியோர் வையில்கார்ட் எண்ட்ரி கொடுத்தனர்.
இந்நிலையில், செமிஃபைனல் போட்டிக்கு மைம் கோபி, சிவாங்கி, விசித்ரா, சிருஷ்டி மற்றும் கிரண் ஆகியோர் முன்னேறி இருக்கிறார்கள்.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு நடைபெறும் வைல்காட் போட்டியில் ஆண்ட்ரியா வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |