முதல் ஆளாக பைனலுக்கு சென்ற போட்டியாளர் யார்? குக் வித் கோமாளியில் திடீர் திருப்பம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் முதல் ஆளாக பைனலுக்கு சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
10 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் டாப் போட்டியாளர்களாக விசித்ரா, மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, கிரண் மற்றும் சிவாங்கி ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
இந்த போட்டியாளர்களில் முதல் ஆளாக பைனலுக்கு யார் போகின்றார் என்று தீர்மானிக்கும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
டாப் 5 போட்டியாளர்களுக்கு இடையே நடந்த அட்வாண்டேஜ் டாஸ்க்கில் கிரணும், குரேஷியும் அதிகளவில் ஜவ்வு மிட்டாய்களை செய்து வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் இன்று மெயின் டாஸ்க் ஒளிபரப்பாக உள்ள நிலையில், பைனலுக்கு செல்லும் போட்டியாளர் குறித்து மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
தற்போது முதல் ஆளாக பைனலுக்கு விசித்ரா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.