குக் வித் கோமாளியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் நுழைந்த போட்டியாளர்; இன்ப அதிர்ச்சியில் முழ்கிய ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இரண்டாவது சீசனில், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷகிலா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தீபா, கனி ஆகியோர் விறுவிறுப்பாக செயல்பட்டனர்.
மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி,மணிமேகலை சுனிதா, டிக்டாக் சரத் ஆகியோர் உள்ளனர். இவர்கள் செய்யும் கூத்துக்களுக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, முதன்முறையாக வைல்ட் கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை ரித்திகா களமிறங்கியுள்ளார். அவரைக் கண்டதும் போட்டியாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பிரமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.