பிரியங்கா, மணிமேகலை இடையே சண்டை... மா.கா.பா கொடுத்த பதில் என்ன?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய நிலையில், தொகுப்பாளர் மா.கா.பா இதுகுறித்து கேட்டகப்பட்ட கேள்வி பதில் அளித்துள்ளார்.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வேலையில் சுயமரியாதை மிகவும் முக்கியம் ஆகும். குறித்த நிகழ்ச்சியில் குக்காக வந்த பெண் தனது வேலையை செய்ய விடாமல் தொகுப்பாளர் போன்று செயல்படுகின்றார். அவரது வேலையை மறந்து எனது வேலையை செய்யவிடாமல் தொகுப்பாளர் வேலையில் தலையிடுவதாக கூறியிருந்தார்.
மணிமேகலை குறிப்பிடுவது தொகுப்பாளரும், குக் வித் கோமாளியில் குக்காக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவை தான் நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மா.கா.பா கூறியது என்ன?
இந்நிலையில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும், பிரியங்காவின் நெருங்கிய தோழரான மா..கா.பா ஆனந்த் கூறிய பதில் வைரலாகி வருகின்றது.
மா.கா.பா கூறுகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை... அங்கு நடந்தது என்ன என்ற உண்மை தெரியாது... தான் ஒருவருக்கு மட்டும் தான் சப்போர்ட் என்று கூற முடியாது. நாம் ஒரு காட்டுக்குள் ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நாம போய் அதில் தடுக்க முடியாது.
அப்படி தடுத்தால் நமக்கே பிரச்சனையாகும். அந்த யானைகள் நம்மை தூக்கிப்போட்டு கொன்றுவிடும். அதுபோல பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே போனது அவருடைய கருத்து. அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |