வாழ்க்கை என்பது இதுதான்... தமிழக வீரர் நடராஜனின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
மிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். நெட் பவுலராக சென்ற நடராஜனுக்கு, முன்னணி வீரர்கள் காயத்தால் வெளியேறியதால் அந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதனை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட நடராஜன், தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவரைப்போலவே, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமான முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு, இந்திய அணி வெற்றிபெற பெரும் உதவியாக இருந்தனர். இதனால் இவர்களுக்கு அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆனந்த் மஹிந்திரா கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டதால், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட 6 அறிமுக வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார் பரிசாக வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். சொன்னபடி அவர்களுக்கு புதிய கார்களை பரிசாக வழங்கினார். அதில் நடரஜானுக்கு மஹிந்திராவின் புதிய தார் எஸ்.யு.வி கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதன்பின்னர், நடராஜன் பரிசளித்த காரை தனது பயிற்சியாளரும் நலம் விரும்பியுமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு பரிசாக வழங்கினார். இதற்கு நடராஜனுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வந்தன. இந்நிலையில், நண்பர்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து நாமக்கலில் உள்ள கொல்லிமலைக்கு நடராஜன் சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடராஜன், “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களும் சாகசங்களும் தான்” என caption போட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
View this post on Instagram
2ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US