கையில் குழந்தையுடன் கதறிய ஹரி வைரவனின் மனைவி! இனி யாருமே இல்லை... நிற்கதியாக நிற்கும் அவல நிலை!
என் கணவர் இன்று உயிருடன் இல்லை மக்கள் தான் இனி எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கையில் குழந்தையுடன் மறைந்த நடிகர் ஹரி வைரவன் மனைவி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஹரி வைரவன் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் கபடி வீரராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் .
அதன் பின்னர் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கும் சென்றுள்ளார்.
அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் இப்போது அவர் மரணம் அடைந்துள்ளார்.
கதறிய ஹரி வைரவனின் மனைவி!
இந்த நிலையில் குழந்தையை கையில் ஏந்தி கொண்டு மனைவி உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
இதுவரைக்கும் உதவிய அனைவருக்கும் நன்றி. இப்போது என் கணவர் உயிருடன் இல்லை.
அடுத்து நான் என்ன செய்ய போகின்றேன் என்று கூட எனக்கு தெரிய வில்லை. நீங்கள் தான் உதவ வேண்டும் என்று கண்ணீருடன் மறைந்த நடிகர் ஹரி வைரவன் மனைவி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் மனைவி
தற்பொழுது நடிகர் ஹரி வைரவனின் உடலானது மதுரை கடச்சநேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கணவரை இழந்த ஹரி வைரவனின் மனைவி குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் நிலை காண்போரை கண்கலங்க செய்கிறது.