கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து... பேராசிரியர் செய்த முகம்சுழிக்கும் காரியம்
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவான பேராசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், பாளையங்கோட்டை சாந்தி நகர் காவல்துறை காலனியில் வசிக்கும் சட்டக் கல்லூரி துணைப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி ஆன்லைனில் பாடம் எடுக்கும் போது தனது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தார்.
நான் ஊருக்கு செல்வதை அறிந்த உதவி பேராசிரியர் தனது காரில் கொண்டு விடுவதாக அழைத்து நடுவழியில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து வண்புணர்வில் ஈடுபட்டுள்ளார். அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு அடிக்கடி வண்புணர்வில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.

இதனிடையே மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாநகர காவல்துறை ஆணையாளர் அன்புவிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
முன்னுதாரனமாக நடந்து கொள்ள வேண்டிய பேராசிரியர் மாணவியிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தற்போது புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் ராஜேஷ்பாரதி ஏற்கெனவே கல்லூரி வளாகத்தில் தனது பிறந்தநாளின் போது அரிவாளைக் கொண்டு கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது வன்புணர்வு புகாரில் மீண்டும் சிக்கியுள்ளார்.