தனது காதலை ஏற்க மறுத்த மகள்! துடிதுடிக்க கொலை செய்த சித்தப்பா
கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, தொந்தரவு செய்த சித்தப்பா இறுதியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை காதலித்த சித்தப்பா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா(21) என்ற பெண் கல்லூரியில் படித்து வந்துள்ள நிலையில், சித்தப்பா முறை கொண்டு கருப்பையா என்பவரின் மகன் துரைக்கண்ணு(36) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
குறித்த நபரின் காதல் உறவு முறையை மீறி இருப்பதால் பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பவித்ராவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெற்போர்கள் வீட்டில் இல்லாத தருணத்தில் வீட்டிற்கு வந்த துரைக்கண்ணு பவித்ராவை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால், மறுப்பு தெரிவித்த அப்பெண் கூச்சல் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த துரைக்கண்ணு பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்ததால், மயங்கி விழுந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்பு தனது வீட்டிற்கு சென்ற துரைக்கண்ணு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.