நாள்பட்ட சளியை அடித்து விரட்டும்... ஒருமுறை இந்த ரசம் வைத்து சாப்பிடுங்க
நாள்பட்ட சளியை அடித்து விரட்டு ஒரு வகையான ரசம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர் காலம் தொடங்கிவிட்டாலே நோய்களும் வரிசை கட்டி வந்துவிடும். பெரும்பாலும் சளி, காய்ச்சல், இருமல் இவற்றினால் தான் அதிகமானோர் அவதிப்படுவார்கள்.
இதற்கு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், வீட்டில் ரசம் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
அந்த வகையில் சளியை துரத்தியடிக்கும் கொள்ளு ரசம் எவ்வாறு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 50 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 3
தக்காளி - 1
கருவேப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - தாளிப்பதற்கு
எண்ணெய், கடுகு - தாளிப்பதற்கு
செய்முறை
முதலில் கொள்ளு, மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு, புளி கரைசலை தயார் செய்யவும். தயார் செய்து வைத்திருக்கும் புளி கரைசலையும் குறித்த கலவையில் சேர்த்துக் கொள்ளவும். அந்த கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்து விடவும்.
பின்னர் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் நீங்கி நன்கு வதங்குவதற்கு சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் 5 நிமிடம் களித்து அது நன்கு வதங்கியவுடன் பாத்திரத்தில் வைத்துள்ள கரைசலை ஊற்றி உப்பு காரம் சரி பார்த்து மேலே சிறிது நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி ஒரு கொதி விட்டு இறக்கினால் கொள்ளு ரசம் ரெடியாகி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |