கோவையை சுற்றி 100 கி.மீ. சுற்றளவில் பார்க்க வேண்டிய பசுமை நிறைந்த இடங்கள்!
இந்தியாவில் கோயம்புத்தூருக்கு அருகில் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.
அவை அருகில் சுமார் 100 கி.மீ-க்குள் நாம் பார்த்து வியந்து போகும் அளவிற்கு சில இடங்கள் இருக்கின்றன.
இவை தொடர்பிலும் அங்குள்ள சிறப்புக்கள் என்ன? என்பது தொடர்பிலும் தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
1. லாஸ் அருவி
இந்தியா - கோயம்புத்தூரிலிருந்து சரியாக 43 கி.மீ, தொலைவில் அமைந்திருக்கின்றது. அதாவது கோவைக்கும்- குன்னூருக்கும் இடையே உள்ளது.
இந்த இடத்தில் 30 அடி உயரத்திலிருந்து தண்ணீர் அழகே வடிவாய் கொட்டுகிறது இது தான் இந்த இடத்தின் ஸ்பெஷல் என்று கூறலாம்.
2. வைதேகி அருவி, குரங்கருவி
கோயம்புத்தூர் என்ற இடத்திலிருந்து சரியாக 35 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்றது. இங்கு சென்றால் பசுமை நிறைந்த சில இடங்களை பார்க்கலாம்.
இயற்கை நேசிக்கும் சிலருக்கு இது பொருத்தமான இடமாக இருக்கும்.இங்கிருந்து ஆழியார் அணையில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. குளிக்க வேண்டும் என்றால் இங்கு செல்லலாம்.
3.கோவை குற்றாலம்
கோயம்புத்தூர் அருகாமையில் இருக்கும் புகழ் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இது சரியாக கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த இடமானது புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. ஊட்டி
கோயம்புத்தூரை சுற்றி சுமாராக 85 கி.மீ தூரத்திலுள்ள இடங்களை நாம் “ ஊட்டி” என அழைக்கிறோம். இங்கு சென்றால் குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் உணரலாம்.
மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் பாரம்பரியம் மிக்க மலை ரயிலில் பயணிப்பது அலாதியான இன்பம் கொடுக்கும்.
5. அமராவதி அணை
பொள்ளாச்சியிலிருந்து சரியாக 50 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது அமராவதி அணை. இங்கு பேருந்து வசதி இருப்பதால் வாகனத்தில் செல்லலாம்.
அத்துடன் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையைக் கண்டு ரசிக்க மனம் லேசாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |