Food recipe: தேங்காய்ப்பால் முட்டை கறியை தேங்காய்ப்பால் இல்லாமல் செய்வது எப்படி?
ஏகப்பட்ட சத்துக்களை தனக்குள் வைத்திருக்கும் முட்டையை வைத்து ஏகப்பட்ட ரெசிபிக்கள் செய்திருப்போம்.
ஆனால் தேங்காய்ப்பால் முட்டை கறி செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும்.
அதுவும் தேங்காய்ப்பால் இல்லாமல் இந்த கறியை கடலை மா பயன்படுத்தி அல்லது பொட்டுக்கடலை அரைத்து பயன்படுத்தி செய்யும் பொழுது சுவை அள்ளும்.
அந்த வகையில் தேங்காய்ப்பால் முட்டை கறியை தேங்காய்ப்பால் இல்லாமல் செய்வது எப்படி? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
• தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• உளுந்து – கால் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
• பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
• இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)
• பச்சை மிளகாய் – 2
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
• சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• முட்டைகள் – 4
• மிளகு – சீரகத்தூள் – அரை ஸ்பூன்
• கடலை மா அல்லது பொட்டுக்கடலை வறுத்த பொடி- 1 கப் ( நீரில் கலந்து கொள்ளவும்.)
• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்
• மல்லித் தழை – சிறிதளவு
தேங்காய்ப்பால் இல்லாமல் செய்வது எப்படி?
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசம் போனவுடன், அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து கிளறிக் கொண்டே சீரகத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் போதிய அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
மசாலாவின் பச்சை வாசம் போனவுடன், அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு நல்ல கெட்டியாக வந்தவுடன் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
கடாய் முழுவதும் ஊற்றாமல் ஒரு பக்கமாக ஊற்றினால் கறி பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். முட்டைக்கு மேல் மிளகு, சீரகத்தூள் சேர்த்து மிதமான தீயில் முட்டையை வேக வைக்கவும். அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை பொடியை நன்றாக தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். கடலை மா இருந்தாலும் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
முட்டை மசாலாவுடன் சேர்ந்து வெந்தவுடன் அதில் இந்த பொட்டுக்கடலை கலவையை கடாயை சுற்றி ஊற்றி, மூடிப்போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கடைசியாக, கரம் மசாலாத் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான தேங்காய்ப் பால் முட்டை கிரேவி தேங்காய்ப்பால் இல்லாமல் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |