முழு தேங்காய் பூவை ஒருவர் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண்டிப்பா தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க
ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் தேங்காய் பூவை சாப்பிட்டால் என்னென்ன நோய்க்கு தீர்வாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் பூ
தென்னை மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட தேங்காய், மீண்டும் மண்ணில் புதைக்கப்பட்டு 90 நாட்கள் மண்ணிலே வளர விடப்படுகின்றன. 90 நாட்களில் தேங்காய் முளைத்த பின்னர் தேங்காய்க்குள் தேங்காய்ப்பூ உருவாகிறது.
மண்ணில் புதைக்கப்பட்ட தேங்காய் 90 நாட்களுக்கு பின் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 90 நாட்கள் மண்ணிலேயே இருந்த தேங்காயின் சத்துக்கள் அனைத்தையும் தேங்காய்ப்பூ உறிஞ்சி வைத்துக் கொள்கிறது.
முற்றிய தேங்காயிலிருந்து வரக்கூடிய கருவளர்ச்சி தான் தேங்காய் பூ என்று சொல்லப்படுகிறது. இந்த தேங்காய் பூ , தேங்காயின் முழு உள்பரப்பும் நிறைந்து உருண்டை வடிவத்தில் வெண்மையாக சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்.
தேங்காய் பூவின் சத்துக்கள்
இது நிறைய நன்மைகளை கொண்டது. தாயின் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள சில சத்துக்கள் இளநீரில் தான் உள்ளது. அப்படிப்பட்ட இளநீர் கருவாக வளர்ச்சி பெருகையில் அதிக அதிகப்படியான சத்துப்பொருட்கள் நிறைத்து இருக்கிறது.
தேங்காய் பூவில் நீர்சத்து அதிகம் உள்ளதோடு மட்டுமல்லாமல், அது இன்சுலின் சுரப்பியின் செயல்பாட்டை தூண்டுவதால் நீரிழிவு நோயும் குணமடையும்.
நோய்களுக்கு தீர்வு
இளநீரை விட கூடுதல் விலை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.
தேங்காய் பூவானது சுவையில் தென்னங்குருத்து போன்றே உள்ளது. கல்லீரல் பிரச்னை, வாய் புண், குடல்புண், வாயு பிரச்சனை, உடல் சூடு , சிறுநீரக கல், சளி, நுரையீரல் சம்பந்தப்பட்ட மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தேங்காய்ப்பூ எடுத்துக்கொண்டால் நன்மையளிக்குமாம்.
குறிப்பு
இது அளவாக , அதாவது ஒரு தனிநபர் அதிகபட்சம் ஒரு முழு தேங்காய் பூவை மட்டுமே சாப்பிடுவது நல்லது. அதற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.
அளவுக்கு அதிகமாக உண்டால் அது பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வல்லது.